News March 27, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் நள்ளிரவில் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த கடற்படையினர், ஒரு படகு மற்றும் வலைகள், மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
விழுப்புரம்: தந்தை கண்டித்ததால் மாணவன் விபரீத முடிவு!

விழுப்புரம்: மரூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினேஷ் குமார் (18) திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தினேஷ்குமார் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் ஏழுமலை, தனது மகன் தினேஷ்குமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த தினேஷ்குமார் வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரிய தச்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 3, 2025
Cinema 360°: ₹62.47 கோடி வசூலித்த தனுஷின் இந்தி படம்

*அனுபமாவின் ‘லாக்டவுன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ இந்தியாவில் மட்டும் இதுவரை ₹62.47 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு *திவ்ய பாரதி நடித்துள்ள ‘GOAT’ டீசர் வெளியாகியுள்ளது. *அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே டீசர் டிச.7-ம் தேதி ரிலீசாகிறது. *பசுபதியின் ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடர் டிச.5 முதல் சோனி லைவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
News December 3, 2025
சிரஞ்சீவியை போல் விஜய் சறுக்குவார்: தமிழருவி மணியன்

அதிமுக அணியில் தவெக இடம்பெற EPS-ஐ CM வேட்பாளராக விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார். இதற்கு வாய்ப்பில்லை என்ற அவர், இதனால் கூட்டணி அமையவும் வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.. மேலும், எப்படி ஆந்திராவில் சிரஞ்சீவி ஒரு அனுபவத்தைப் பெற்றாரோ அதே அனுபவத்தை விஜய் பெறுவார் எனவும், சிரஞ்சீவியை போல் கண்டிப்பாக சறுக்குவார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


