News July 28, 2024

ராக்கெட் தாக்குதலில் 11 பேர் பலி

image

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஃபுட் பால் மைதானத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 11 பேர் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானில் இருந்து ஹெஸ்பொல்லா ஆயுத குழு ராக்கெட்டை ஏவியதாகவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் 10-20 வயதுடையவர்கள் எனவும் கூறியுள்ளது. இதற்கு ஹெஸ்பொல்லா அமைப்பு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 3, 2026

கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க:<> CLICK HERE <<>>இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

L வடிவ பாலத்தில் 4 பெரும் குறைபாடுகள்: அன்புமணி

image

சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம் தரமற்றது என்பதை உறுதிபடுத்தும் விதமாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ள<<19180715>> 4 காரணங்களை அன்புமணி அடுக்கியுள்ளார்.<<>> வலுவற்ற இரும்பு கம்பிகள், தரமற்ற சிமெண்ட், சீராக பரப்பப்படாத கான்க்ரீட் கலவை & ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் தூண்கள் என கூறியுள்ளார். பாலம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு TN அரசு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 3, 2026

திமுகவுடன் கூட்டணி.. வெளிப்படையாக அறிவித்தார்

image

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பேசிய செல்வப்பெருந்தகை, திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார். தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக கெடு விதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!