News March 2, 2025

படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி

image

சீனாவில் பயணிகள் படகுடன் மற்றொரு பெரிய வகைப் படகு மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஹூனான் மாகாணத்தில் உள்ள யுவான்ஷியி நதியில் 19 பேருடன் சென்று கொண்டிருந்த படகும், அந்த வழியாக வந்த எண்ணெய் கசிவு சுத்திகரிப்பு படகும் மோதிக் கொண்டன. இதில், பயணிகள் படகு நீரில் மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மாயமான 8 பேரில் மூவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 பேரை மீட்புக் குழு தேடி வருகிறது.

Similar News

News March 13, 2026

பெட்ரோல், டீசல்.. இரவில் புதிய அறிவிப்பு வெளியானது

image

பல இடங்களில் கேன்களில் பெட்ரோல் வாங்கும் நிலை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இந்திய ஆயில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான அளவில் பெட்ரோல், டீசல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அச்சத்தில் அதிகமாக வாங்குவது, தவறான முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News March 13, 2026

தோனி செய்வது சரியல்ல: புஜாரா

image

ஐபிஎல் பீவர் தொடங்கியுள்ள நிலையில் தோனி பேட்டிங் குறித்து Ex கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். தோனியால் ஒரு போட்டியைத் தனி ஒரு ஆளாக வென்று கொடுக்க முடியும் என்று கூறியதுடன், 8 அல்லது 9-வது வீரராக அவர் பேட்டிங் செய்வது சரியல்ல என கூறியுள்ளார். வெறும் 5, 10 பந்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, 25 முதல் 30 பந்துகளை எதிர்கொள்வது அணிக்கு நல்லது எனவும் அவர் பேசியுள்ளார்.

News March 13, 2026

பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: CM ஸ்டாலின்

image

OBC அல்லாத கிரீமி லேயர் நிர்ணயத்தை தெளிவுபடுத்தும் SC-ன் தீர்ப்பை தான் வரவேற்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி இனி சம்பள வருமானத்தை கிரீமி லேயருக்கான வணிகம் அல்லது சொத்து வருமானத்துடன் சமப்படுத்த முடியாது; வேலைவாய்ப்புத் துறைகளில் விரோதமான பாகுபாட்டை இத்தீர்ப்பு நிராகரிக்கிறது என கூறியுள்ளார். பல வருட போராட்டத்திற்குப் பிறகு OBC நீதிக்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!