News April 7, 2024
11 மணி நேரம் விசாரணை… பிரபலங்கள் பலர் சிக்கலாம்?

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் செல்போனிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளில் பல திரைப் பிரபலங்கள் சிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அமீரிடம் முதல்கட்டமாக நடந்த 11 மணி நேரம் விசாரணையில், சாதிக்கின் சினிமா தொடர்புகள், முதலீடுகள் குறித்தும் விலாவாரியாக விசாரித்ததாகத் தெரிகிறது. சாதிக் வழியே முதலீடு செய்த சினிமா பிரபலங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News November 4, 2025
செல்போன் ரீசார்ஜ்.. இது 6 மாதம் இலவசம்

BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சம்மன் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இதில், ₹1,812-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓராண்டுக்கு தினமும் 2GB டேட்டா, 100 SMS மற்றும் அன்லிமிட்டெட் கால் உள்ளிட்டவற்றை பெறலாம். முக்கிய அம்சமாக, இந்த திட்டத்தில் BiTV பிரீமியம் சப்ஸ்கிரிப்சனை 6 மாதத்திற்கு இலவசமாக பெறலாம். இந்த ஆஃபர் நவ.18 வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News November 4, 2025
PAK-கிற்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வழங்கும் சீனா

சீனாவின் அதிநவீன 8 நீர்மூழ்கி போர் கப்பல்களை (Hangor – Class Diesel – Electric Submarines) அடுத்த ஆண்டு தங்களது கடற்படையில் சேர்க்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இவை அதிநவீன ஆயுதங்கள், சென்சார்களை கொண்டிருப்பதோடு, நீருக்குள் வாரக்கணக்கில் இருக்கும் அளவிற்கு பேட்டரி திறனை கொண்டிருக்கும். இந்த தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 4, 2025
திமுகவுக்கு தாவிய அதிமுக Ex.அமைச்சர்கள்… PHOTOS

திமுகவில் இன்று அமைச்சர்களாகவும், முக்கிய பொறுப்புகளிலும் உள்ள பிரபலமான பலர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தெரியுமா? அப்படி எதிரணியில் இருந்து திமுகவுக்கு சென்றவர்களில் பிரபலமான சிலரின் போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து பாருங்கள். இந்த பட்டியலில் விடுபட்ட முக்கியமானவர்கள் யாரேனும் உள்ளனரா? கமெண்ட்டில் சொல்லுங்கள்.


