News August 14, 2024
11 பெண்களுக்கு ரூ.1.65 லட்சம் வழங்கல்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் கீழ் 11 நலிந்த பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.1.65 லட்சத்திற்கான காசோலையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் இன்று (ஆக.14) மாலை வழங்கினார். நிகழ்வில் கலெக்டர் த.பிரபுசங்கர், வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 2, 2025
திருவள்ளூர்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு..

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 2, 2025
திருவள்ளூரில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த <
News November 2, 2025
திருவள்ளூர்: பெற்றோரை இழந்த சோகத்தில் பெண் தற்கொலை!

திருவள்ளூர் அருகே நயப்பாக்கம் சேர்ந்த அருண்குமார் (23) இவரின் தாய் தந்தை இருவரும் இவரின் சிறுவயதிலேயே உயிரிழந்தானர். இதனால் அருண்குமாரும் தங்கை பாரதியும் பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த பாரதி 40 தூக்க மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


