News August 15, 2024
11 நாள் சட்டசபை கூட்டத் தொடரில் 404 கேள்விகள்

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதியாக சபாநாயகர் செல்வம் நன்றி தெரிவித்து பேசியதாவது, “புதுச்சேரி சட்டசபை 11 நாட்கள் நடத்தப்பட்டு எம்எல்ஏக்களின் 404 கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது. சபை நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த உறுப்பினர்களுக்கு நன்றி” தெரிவித்தர்.
Similar News
News September 17, 2025
புதுச்சேரி: முதல்வர் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி விரைவில் எந்த மாதத்தில் அரிசி வழங்காமல் விடுபட்டதோ அந்த மாதத்திற்கான அரிசி முதல் வழங்கப்படும். இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி 200க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.
News September 17, 2025
புதுவையில் இலவச அரிசிக்கு கவர்னர் ஒப்புதல்

இலவச அரிசிக்கான டெண்டரில், மத்திய அரசு ஊழியர்களின் கூட்டுறவு நிறுவனமான கேந்திரிய பந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கான்பெட் நிறுவனத்திற்கு 61,800 மெட்ரிக் டன் இலவச அரிசியை சப்ளை செய்ய உள்ளது. இந்த கோப்பிற்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, விடுபட்ட மாதங்களுக்கான அரிசியையும் சேர்த்து வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
News September 17, 2025
புதுச்சேரி To திருப்பதிக்கு PRTC சிறப்பு பஸ்

திருப்பதியில் நடைபெறும் புராட்சி மாத பிரம்மோற்சவத்தையொட்டி பி.ஆர்.டி.சி., சார்பில் இன்று (17 ம் தேதி) முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ் தினசரி இரவு 9:30 மணிக்கு புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். திருப்பதியில் இருந்து காலை 7:30 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்படும். இதற்கான கட்டணம் ரூ.300 ஆகும் என இதன் மேலாளர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!