News March 29, 2025

11 வழித்தடத்தில் மினி பேருந்து சேவைக்கு ஆணை

image

1.திருவடிசூலம் – பெரிய இரும்பேடு, 2.திருப்போரூர் பி.டி.ஓ. அலுவலகம் – திருப்போரூர், 3.கொட்டமேடு சாலை சந்திப்பு – முள்ளிப்பாக்கம் சாலை சந்திப்பு, 4.புத்திரன்கோட்டை – கடப்பாக்கம், 5.மதுராந்தகம் பேருந்து நிலையம் – வெளிக்காடு, 6.பெரிய வெளிக்காடு கூட்டுரோடு – பவுஞ்சூர், 7.மதுராந்கம் பேருந்து நிலையம் – கொளம்பாக்கம், 8.ஊனமலை கூட்டுரோடு – மதுார், 9.கொத்திமங்கலம் சாலை சந்திப்பு – சந்தனம்பட்டு.

Similar News

News October 16, 2025

நீச்சல் போட்டியில் அசத்தல்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, வேளச்சேரியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று (அக்.14) நடந்த நிலையில் செங்கல்பட்டைச் சேர்ந்த நிதிக் நாதெல்லா 100 மீட்டர் பேக் ஸ்டோர்க் போட்டி, கவீன்ராஜ் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டி, யாதேஷ்பாபு 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோர்க் போட்டியில் முதலிடம் பெற்று பதக்கங்களை வென்றனர்.

News October 15, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

News October 15, 2025

காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு ரயில்கள்!

image

தீபாவளி விடுமுறையை ஒட்டி வருகின்ற 22-ம் தேதி காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4, 4.30, 5, 5.35, 6.39 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!