News August 15, 2024
11 நாள் சட்டசபை கூட்டத் தொடரில் 404 கேள்விகள்

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதியாக சபாநாயகர் செல்வம் நன்றி தெரிவித்து பேசியதாவது, “புதுச்சேரி சட்டசபை 11 நாட்கள் நடத்தப்பட்டு எம்எல்ஏக்களின் 404 கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது. சபை நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த உறுப்பினர்களுக்கு நன்றி” தெரிவித்தர்.
Similar News
News November 15, 2025
காரைக்காலில் வாக்காளர் உதவி மையம் அமைப்பு

காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 2026 நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான விவரங்களை பெற காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-யை பயன்படுத்தியும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
புதுவையில் கத்தியுடன் சுற்றிய வாலிபர்

புதுவை ரெட்டியபார்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, உழவர்கரை வயல்வெளி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் போலீசார் அவரை சோதனையிட்டபோது, அவரிடம் கத்தி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் உழவர்கரைச் சேர்ந்த பிரேம்குமார் என தெரியவந்தது. இதனையடுத்து உடனே அவரை கைது செய்தனர்.
News November 15, 2025
புதுவை: போலி பங்கு சந்தை மூலம் ரூ.2.5 கோடி மோசடி

புதுவை ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவருக்கு சமூக வலைதளத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதனை நம்பி அவர் சுமார் ரூ.2.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு ரூ.12.5 லட்சம் லாபம் கிடைத்ததாக காண்பித்துள்ளது. ஆனால் அதனை தனது வங்கிக்கு மாற்ற இயலாது, தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.


