News March 15, 2025

10ம் வகுப்பு பொதுத்தேர்வு; தயாராகும் கல்வித்துறை

image

திருப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 30,235 மாணவர்கள், 1,097 தனித்தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். 108 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1,780 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட் www.dge.tn.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்திலோ அல்லது ஒரு நாள் முன்பே பெறலாம்.

Similar News

News March 16, 2025

திருப்பூர்: ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதை மற்ற இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

திருப்பூரில் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்கள்

image

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில். சிவன்மலை முருகன் கோயில். திருமுருகன் பூண்டி கோயில். அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில். ஊத்துக்குளி முருகன் கோயில். பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில். வாமனஞ்சேரி வலுப்பூரம்மன் கோயில். திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயில். கருவலூர் மாரியம்மன் கோயில், அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.

News March 16, 2025

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

image

திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி, சந்தேகப்படும் வகையில் வந்த, வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். அதில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜன், 20 என்பது தெரிந்தது. சோதனையில், 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!