News August 29, 2024
இன்று முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், இன்று காலை 10 மணி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெறலாம். தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
Similar News
News July 7, 2025
நிர்வாகிகள் மதிப்பதில்லை என புலம்பிய நயினார் நாகேந்திரன்

கட்சி நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் சிலர் மதிப்பதில்லை; ஒரு வணக்கம் கூட சொல்வதில்லை என நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக தலைவரான பிறகும் கட்சியில் அவருக்கு உரிய மரியாதை இல்லை என பேசப்படும் நிலையில், நயினாரின் பேச்சு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தலைவர் பதவியில் இருந்து விலகி, அரியணையை அண்ணாமலைக்கு கொடுங்கள் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
News July 7, 2025
பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை விளாசிய மோடி

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவாளர்களையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது என பிரிக்ஸ் மாநாட்டில் PM மோடி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய அவர், தீவிரவாத தடுப்பு என்பது வெறும் கண்துடைப்பாக இல்லாமல் கடுமையான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதோடு காஸா நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
தூத்துக்குடி மாவட்டம், சோளிங்கர் வட்டத்திற்கு லீவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி வேலைநாளாகும். அதேபோல், யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராணிப்பேட்டையின் சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையாகும். SHARE IT.