News July 6, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

சிவகங்கை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க.

Similar News

News July 6, 2025

சக்தி வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன்

image

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இங்குள்ள சத்ரு சம்ஹார வேல் கோயிலின் சிறப்பு. கடன், பிணி நீங்க, எதிரிகள் தொல்லை அகல, ராகு தோஷம் விலக இங்கு வழிபடலாம். பேசாத குழந்தைகள் பேச, பிரிந்த குடும்பத்தினர் ஒன்று சேர, நீதி பெறவும் இக்கோயில் பிரசித்தி பெற்றது. இதை *SHARE* பண்ணுங்க.

News July 6, 2025

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஸ்தல வரலாறு

image

முன்னொரு காலத்தில் கண்டதேவி அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வறட்சி மிகுந்த நிலையில் விவசாயம் இல்லாமல் பஞ்சத்தில் இருந்தது. எனவே இப்பகுதி மக்கள் இக்கோயில் உள்ள இடத்தில் கூடி பிரார்த்திக்க பொன் பொழிந்தது. பொன்னுக்கு மற்றொரு சொல் சொர்ணம். எனவே இக்கோவிலில் உள்ள சுவாமி சொர்ணமூர்த்தி என அழைக்கப்பட்டார் என்பது வரலாறு. இக்கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கோயிலாகும்.

News July 6, 2025

சிவகங்கை இரவு ரோந்து பணி விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (05.07.25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் சார்பாக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியை சேர்ந்த அதிகாரிகளின் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லது 100 டயல் செய்யலாம். அவசர காலத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அழைக்கலாம்.

error: Content is protected !!