News November 20, 2025
10th பாஸ் போதும்.. ₹18,000 உடன் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, ITI தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ₹18,000 – ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News November 24, 2025
2.60 லட்சம் உக்ரைனியர்களின் கதி என்ன?

போர் காரணமாக 2.60 லட்சம் உக்ரைனியர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு பைடன் அரசு வழங்கிய சிறப்பு சலுகைகளை டிரம்ப் அரசு தாமதப்படுத்துகிறது. மேலும், டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற விதிகளால், 2026 மார்ச் 31-க்கு பிறகு அவர்களால் அங்கு வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், போர் நிறுத்தம் இழுபறியாகி வருவதால், என்ன செய்வது என்றே தெரியாமல் அம்மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
News November 24, 2025
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான ‘காந்தாரா’ மொழி, கலாச்சாரத்தை தாண்டி பல மக்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து அவர் அடுத்த PAN இண்டியன் படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் கலாச்சாரம் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோக, தற்போது பிரசாந்த் வர்மாவின் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ஹனுமன் வேடத்தில் ரிஷப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
பொதுக்குழுவில் EPS-க்கு முழு அதிகாரம்

டிச.10-ல் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் EPS-க்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கவும் முடிவெடுக்கப்படவுள்ளது. மேலும், கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தலுக்கு தயாராவது, ஐடி விங் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


