News July 9, 2025

10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (1/2)

image

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். <<17003541>>(பாகம்-2)<<>>

Similar News

News August 25, 2025

திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் வேலை

image

திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்படவுள்ளனர். இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் 21.09.2025-ம் தேதிக்குள்ளாக <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

திருச்சி: ரேஷன் கடை பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

திருச்சி மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News August 25, 2025

திருச்சி: பெயர்க்காரணத்தைக் கூறும் கல்வெட்டு!

image

திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் ‘சிரா’ என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்ததாக அக்குகையில் உள்ள 11-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. “சிரா” துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகியது என்றும்; 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திரு-சிலா-பள்ளி (புனித-பாறை-ஊர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்தும் திருச்சிராப்பள்ளி என்ற பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

error: Content is protected !!