News March 18, 2025
10th பொதுத்தேர்வு: குமரயில் 22,044 பேருக்கு ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த தேர்வினை 22 ஆயிரத்து 44 மாணவ மாணவிகள் எழுதியிருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகம் நேற்று(மார்ச் 17) தொடங்கியது.
Similar News
News March 19, 2025
திருவனந்தபுரத்தில் வைகுண்டருக்கு மணி மண்டபம்: கேரள முதல்வர்

குமரி மாவட்டம் சாமிதோப்பில் அயயா வைகுண்டர் தலைமை பதி உள்ளது. திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கேரள நாடார் சமூக மக்களிடம் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வைகுண்ட சாமி தர்மபரிபாலன அமைப்பு தலைவர் சந்திரசேகரன் தலைமையிலான பிரதிநிதிகள் கேரள முதலமைச்சரை சந்தித்தபோது இதை அவர் கூறியதாக தகவல்.
News March 19, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 19) 28.55அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.10 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 50 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 20 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
News March 19, 2025
நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து மார்ச் 22 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நடைபெறும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இளைஞர் இதில் பங்கேற்று பயன்பெறலாம். நண்பர்களுக்கு share பண்ணுங்க.