News March 30, 2024
தமிழ்நாட்டில் 1,090 மனுக்கள் ஏற்பு

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் தாக்கலான 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்களும், குறைந்தபட்சமாக தஞ்சை, காஞ்சிபுரத்தில் தலா 13 மனுக்களும் ஏற்கப்பட்டிருக்கின்றன.
Similar News
News August 15, 2025
மதவெறியை நிராகரித்தலே உண்மையான சுதந்திரம்: CM

சுதந்திர தினத்தில் திருட முடியாத ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் உறுதியேற்போம் என CM ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நமது சுதந்திர போராளிகளின் கனவுகளை நிறைவேற்றி அனைவரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ வழிவகை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு.. பணவீக்கமும் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று(ஆக.14) மீண்டும் 10 காசுகள் சரிந்து ₹87.57 ஆக உள்ளது. இதனிடையே, கடந்த ஜூலை மாதத்தில், மொத்த விலை பணவீக்கமும் மைனஸ் 0.58% என எதிர்மறையாக பதிவாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இதுதான் மிகவும் குறைவான பணவீக்க விகிதமாகும். உணவு பொருள்கள், கனிம எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றின் விலை சரிவால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
News August 15, 2025
79th Independence Day: நயா பாரத் என்றால் என்ன?

நாட்டின் 79-வது சுதந்திர தினம் ‘Naya Bharat’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. அதாவது, வளங்கள், பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கிய பயணத்தையே இந்த நயா பாரத் குறிக்கிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக கொடியேற்றும் PM மோடி, நாட்டு மக்களிடம் இது குறித்து உரையாற்றுகிறார்.