News May 24, 2024
ஐந்து மாதத்தில் 109 பேர் உடல் உறுப்பு தானம்

உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த பின் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 170 பேர் உறுப்பு தானம் செய்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 109 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் 642 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
Similar News
News March 11, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 11, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை 2-வது நாளாக இன்றும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹15,120-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,20,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,360 அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News March 11, 2026
டெல்லி பாஜக மீது அண்ணாமலை அதிருப்தியா?

மாநில தலைவர் பதவியைவிட பெரிய பதவி எதுவும் வழங்கப்படாததால், பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாக பேசப்பட்டது. இதனால்தான், தந்தையை கவனிக்க வேண்டும் என கூறி சமீபத்தில் தேர்தல் பணிக்கான பதவியை அவர் மறுத்தார் என்றனர். இந்நிலையில், கோவை (அ) திருப்பூரில், ஏதேனும் ஒரு தொகுதியை எடுத்துகொள்ளலாம் என மீண்டும் ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டதாம். ஆனால் அதையும் அவர் மறுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.


