News April 11, 2025
108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான நேர்முக தேர்வு வரும் (12-04-25) அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்க 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News August 9, 2025
திருச்சி மக்களே இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
திருச்சி: சுகாதாரத் துறையில் வேலை

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், மாவட்டத்தில் காலியாக உள்ள 143 செவிலியர், 11 ஆய்வக நுட்புநர், 5 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் ஆக.,21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க..
News August 9, 2025
திருச்சியில் குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கும் முகாம்

திருச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கும் முகாம் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சுகாதார மையங்களிலும் நடைபெறும் இம்முகாமில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதுடைய கருவுறாத பெண்களுக்கு மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.