News December 27, 2024
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு முகாம்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாளை (டிச.28) காலை 10 – 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இலவச தாய் – சேய் நல வாகன ஓட்டுனர் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 044 2888 8060, 2888 8075, 2888 8077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 1, 2025
ஸ்தம்பித்த தாம்பரம் ரயில் நிலையம்

ஆயுதபூஜை பண்டிகை அக்.,1-ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 2-ம் தேதி காந்திஜெயந்தி வருவதால் தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் புறப்பட்டு சென்றனர். இந்த தொடர் விடுமுறையை அடுத்து பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையம் (ம) பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
News October 1, 2025
செங்கல்பட்டு: சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ்வா. இவர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பைக்கில் அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் ஜோஸ்வாவின் கண்கள் தானம் அளிக்கப்பட்டது.
News October 1, 2025
செங்கல்பட்டில் இன்று இரவு ரோடு செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.