News September 4, 2025

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் பணி!

image

108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு 102,155377 வாகனங்களில் ஓட்டுநர்கள் வேலை மற்றும் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை பி எம் எஸ் எஸ் ஒய் ஹால், (PMSSY HALL) சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் அறிய 8925941586, 8925941578 எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 5, 2025

சேலம்: NO EXAM அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

image

சேலம் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 19.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 5, 2025

சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

வரும் செப்.06 முதல் செப்.27 வரை சேலம் வழியாக செல்லும் வகையில் ஹுப்ளி-ராமநாதபுரம்-ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரயில்களை (07355/07356) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வாரத்தில் சனிக்கிழமைதோறும் ஹூப்ளியில் இருந்து ராமநாதபுரத்திற்கும், மறுமார்க்கத்தில், ஞாயிற்றுக்கிழமைதோறும் ராமநாதபுரத்தில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்று செல்லும்.

News September 5, 2025

மிலாது நபி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திரன்!

image

சேலம்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,இறை ஆசியும்,நபியின் ஒளி,கருணை, இரக்கம் நெஞ்சில் வேரூன்றி நல்லொழுக்க வழியில் சென்று துன்பங்கள் அகன்று, அமைதி, அன்பு, நன்மைகள் பெருகி ஒற்றுமையுடன் மகிழ்ந்திருக்க, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!