News April 6, 2025

108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலை வாய்ப்பு

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இன்று (ஏப்.,6) 108 ஆம்புலன்சில் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 108 வாகன ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. மேலும், தகவலுக்கு, 73388 94971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News April 7, 2025

வாலிபரை எரித்து கொன்ற வழக்கில் 3வது நபர் கைது

image

பர்கூர் வனப்பகுதியில் மார்ச் 30ம் தேதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், எலும்புக்கூடாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரிந்தது. இந்த வழக்கில் வெங்கடேஷ் (32) மற்றும் ராஜேந்திரன் (48) என்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த குமார் என்பவரை பர்கூர் போலீசர் தற்போது கைது செய்துள்ளனர்.

News April 7, 2025

பெருந்துறை அருகே விபத்து: 20 பேர் காயம்

image

கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோயில் பிரிவு அருகில் மேம்பால பணி நடந்து வருகிறது. அங்கு போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். பேருந்தை அதிவேகத்தில் இயக்கியதால் பேரிகார்டு பகுதியில் திருப்ப முடியாத நிலையில், அதன் மீது மோதி மண் குவியல் மீது ஏறி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் 20 பேர் லேசான காயம் அடைந்தனர்.

News April 7, 2025

ஈரோட்டில் 3 மாதங்களில் மட்டும் 19 பேர் பலி

image

ஈரோடு ரயில் நிலையங்களை சுற்றி கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிகாரி தெரிவித்தார். மேலும் 18 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரும்பாலனோர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடிபட்டு உயிரிழந்ததாகவும், இது போன்ற விபத்துகளை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

error: Content is protected !!