News August 15, 2024
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி 108 ஆம்புலன்ஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செந்தில்குமார், மகாலிங்கம் மருத்துவ உதவியாளர் சிங்காரவேல், சஞ்சீவ்காந்தி உள்ளிட்டோர் சான்றிதழ் பெற்றனர். மேலும் 108 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் உடன் இருந்தார்.
Similar News
News December 6, 2025
தருமபுரி:போலி மருத்துவர் கைது!

தருமபுரி மருத்துவம் & ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில், போலி மருத்துவர்கள் ஒழிப்புக் குழுவினர் அதியமான்கோட்டையில் கிளினிக் வைத்து நடத்திவந்த ஒரு வீட்டில் நேற்று ஆய்வு செய்தனர்.அங்கு கணேசன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.மருத்துவக் குழுவினர் விசாரணையில், அவர் பிளஸ் 2 வரை படித்த நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததை எடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர்.
News December 6, 2025
தருமபுரி:அரசு வழக்கறிஞர் (கல்பனா) லஞ்சம் வாங்கி கைது !

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யன் என்பவரின் மகளுக்கு பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி வழக்கு அவரது தந்தையிடம் ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய தர்மபுரி போக்ஸோ நீதிமன்ற அரசு வக்கீல் கல்பனா என்பரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று டிச-5 கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை.
News December 6, 2025
தர்மபுரி:கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம்!

இன்று டிச.5 காரிமங்கலம் அருகே சின்னமிட்ட அள்ளியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பிரவீன் குமார் 19 என்பவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். போலீசார் உடலை கைப்பற்ற பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்து பிரவீன் குமாருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் அவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


