News April 11, 2025
108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான நேர்முக தேர்வு வரும் (12-04-25) அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்க 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News August 11, 2025
திருச்சி: BHEL நிறுவனத்தில் வேலை.. கடைசி வாய்ப்பு

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் <
News August 11, 2025
திருச்சியில் மின்தடை அறிவிப்பு

திருச்சி மெயின்கார்ட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, கரூர் பைபாஸ்ரோடு, சிந்தாமணி, ஓடத்துறை, சிங்காரத்தோப்பு, உறையூர் ஹவுசிங் யூனிட், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், பழூர், ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News August 11, 2025
திருச்சி: உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறுங்க

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை திருச்சி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் என்ற உறுதிமொழியை எடுத்து https://drugfreetamilnadu.tn.gov.in/en#pledgeஇல் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்.