News April 18, 2024
திருப்பதி கோயிலுக்கு 1,031 கிலோ தங்கம் நன்கொடை

திருப்பதி கோயிலுக்கு கடந்த ஆண்டில் 1,031 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தங்கம் விலை அதிகரிக்கும் நிலையிலும், பக்தர்கள் அதை காணிக்கையாகத் தொடர்ந்து அளிக்கின்றனர். 2023இல் ₹773 கோடி மதிப்பிலான 1,031 கிலோ தங்கத்தை காணிக்கையாக அளித்துள்ளனர். இதுதவிர்த்து, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ₹8,496 கோடி மதிப்பிலான 11,329 கிலோ தங்கத்தை கோயில் நிர்வாகம் முதலீடாக வைத்துள்ளது.
Similar News
News February 13, 2026
இறந்த பிறகு ஒருவரின் SM கணக்கு என்னவாகும்?

டெக் உலகில் தற்போது ‘Grief Tech’ என்ற புதிய தொழில்நுட்பம் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒருவர் இறந்த பிறகு அவருடைய SM கணக்கில் உள்ள தகவல்களை வைத்து AI வடிவம் கொடுக்கப்படும். அந்த AI உங்களைப் போலவே பேசும், மெசேஜ் செய்யும், நடந்துகொள்ளும். இது நெருக்கமானவர்களை பிரிந்து வாடுபவர்களுக்கு உதவும் என டெக் நிபுணர்கள் கூறுகின்றனர். இனி ஒருவர் உயிரிழந்தாலும் அவர் AI-ஆக வாழலாம். உங்கள் கருத்து?
News February 13, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,000.. யாருக்கெல்லாம் கிடைக்காது?

இன்று உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை ₹2,000 யாருக்கெல்லாம் கிடைக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.31 கோடி பயனாளிகளுக்கும் இத்தொகை கிடைக்கும். அதேநேரம், புதிதாக விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்திருப்பவர்களுக்கு தேர்தல் முடிந்தாலும் சில மாதங்கள் கழித்தே கிடைக்கும். ஏனென்றால், அதற்கான பணிகள் தொடங்க தாமதமாகும் என கூறப்படுகிறது.
News February 13, 2026
ஜன நாயகன் பட புதிய ரிலீஸ் தேதி இதுவா?

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் வழங்கக் கோரிய வழக்கை தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. இதனையடுத்து மீண்டும் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பிப்.20-ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், சான்றிதழ் தாமதமாகும் என்பதால், அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாம். குறிப்பாக, மார்ச் 5 (அ) 6-ல் படம் ரிலீஸாகலாம் என கூறப்படுகிறது.


