News October 8, 2024

10,200 சதுர அடி பரப்பளவில் த.வெ.க. மாநாடு மேடை

image

விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு மேடை, தமிழக அரசின் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் தலைமை செயலகம் வடிவில், 60 அடி அகலத்தில், 170 அடி நீளத்திற்கு 10,200 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. மேடையில் கட்சி தலைவர் விஜய் மற்றும் வி.ஐ.பி.,க்கள் தங்க, அனைத்து வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.

Similar News

News December 11, 2025

விழுப்புரம்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.<<>>gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

வேலூர்: அரசு பேருந்து மோதி பெண் பலி!

image

திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பெரியசெவலை பழைய காலனியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், கடந்த டிச.9ஆம் தேதி திருக்கோவிலூர் – மடப்பட்டு நெடுஞ்சாலையில் பெரியசெவலை அருகே நடந்து சென்ற போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்து அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, இவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

News December 11, 2025

விழுப்புரம்: கடனை தராததால் கத்தி வெட்டு!

image

விழுப்புரம் அருகே உள்ள வி. பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன், வேலு என்பவரிடம் அன்பழகனின் நண்பரான சங்கர் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதைத் தரும்படி, சங்கரிடம் கேட்டு பிரச்னை செய்தார். இதையறிந்து, அங்கு வந்த அன்பழகன் பிரச்னையைத் தடுக்க வந்தார். இதில் ஆத்திரமடைந்த வேலு, அன்பழகன் கழுத்தில் வெட்டினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!