News August 26, 2024
நெல்லை மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் பதிவு

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்கள் விடுமுறையாக அறிவித்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இன்று (ஆக.26) நெல்லை மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கோடை காலத்தை மிஞ்சும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
Similar News
News January 16, 2026
நெல்லை: தொழில் போட்டியில் முதியவர் மீது தாக்குதல்

பேட்டையை சேர்ந்தவர் ஜெயபாலன் (74). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரம் செய்யும் செல்லையா என்பவர் தொழில் போட்டி காரணமாக நேற்று முன் தினம் ஜெயபாலனை தாக்கினார். காயமடைந்த ஜெயபாலன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் படி பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 16, 2026
நெல்லையில் குவிக்கப்படும் போலீஸார்!

நெல்லை மாவட்டத்தில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள். இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
News January 16, 2026
நெல்லை: காணும் பொங்கல் 1500 போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.


