News August 5, 2024
நெல்லையில் விபத்து மீட்பு பணிக்கு ரூ.10,000 அறிவிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று ஆகஸ்ட் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவும் நபர்களை ஊக்குவிக்க இந்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ரூ.5000ம் பரிசு வழங்குகிறது. இதை ஊக்குவிக்க மாநில போக்குவரத்து துறை அமைச்சர் நிதியில், கூடுதலாக 5,000 சேர்த்து வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 16, 2026
நெல்லை: நகைக் கடைக்காரரிடம் ரூ.6.50 லட்சம் மோசடி

நெல்லை டவுனில் நகைக்கடை நடத்துபவர் சுந்தர்ராஜன் (50). இவரது நண்பரான அமல்ராஜ் என்பவர் மற்றொரு நண்பரின் நகையை மீட்பதற்காக ரூ.6.50 லட்சம் வாங்கியுள்ளார். சுந்தராஜன் அதனை திருப்பி கேட்டபோது அமல்ராஜ் தரமறுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
நெல்லை: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News January 16, 2026
நெல்லை: தொழில் போட்டியில் முதியவர் மீது தாக்குதல்

பேட்டையை சேர்ந்தவர் ஜெயபாலன் (74). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரம் செய்யும் செல்லையா என்பவர் தொழில் போட்டி காரணமாக நேற்று முன் தினம் ஜெயபாலனை தாக்கினார். காயமடைந்த ஜெயபாலன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் படி பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


