News November 10, 2024
10,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

திருவள்ளூரில் நவ.16ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜெயா கலை, அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிந்துகொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News December 11, 2025
திருவள்ளூர்: கத்தியால் வெட்டிய வழக்கில் +2 மாணவர் கைது!

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சி.ஜி.என் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பரத்(18), துளசி(18). நேற்று முன் தினம் மாலை கல்லூரி விட்டதும் பரத், துளசி இருவரும் அரசு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வி.சி.ஆர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் உட்பட 3 பேர் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டி, தப்பிச் சென்றனர். இதையடுத்து, +2 மாணவனை நேற்று(டிச.10) கைது செய்தனர்.
News December 11, 2025
திருவள்ளூரில் கொலை வெறி தாக்குதல்!

பள்ளிப்பட்டு அருகே கல்லாமேடு காலனியைச் சேர்ந்தவர் சுதாகர்(40). இவர், ரங்கையாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேகர்(42) என்பவரின் மனைவியை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சேகர், சுதாகரை பைக்கில் கடத்திச் சென்று தனது நண்பர் வெங்கடேஷுடன்(25) சேர்ந்து அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக சுதாகரின் தம்பி மணிகண்டன்(30) பள்ளிப்பட்டு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News December 11, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (டிச.10) இரவு முதல் இன்று (டிச.11) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


