News February 28, 2025

சிரியாவில் 1,000 பேர் கொடூர கொலை

image

சிரியாவில் 1,000க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அல் ஆஸாத் அதிபராக (2000-2024) பதவி வகித்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு, டமாஸ்கஸ் ராணுவ விமான நிலைய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு அண்மையில் தோண்டப்பட்ட குழியில் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News April 3, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று (ஏப்.3) சவரனுக்கு ₹800 உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 1 கிராம் ₹100 உயர்ந்து ₹13,850-க்கும், 1 சவரன் ₹800 அதிகரித்து ₹1,10,800-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து வருவதால், வரும் நாள்களிலும் விலை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

News April 3, 2026

உங்க தொகுதி வேட்பாளரின் சொத்து மதிப்பு தெரியணுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பற்றி உங்களுக்கு தெரியணுமா? இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்யவும். இதில் உங்கள் மாநிலத்தையும், தொகுதியையும் தேர்ந்தெடுக்கவும். தற்போது வரை உங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் குடும்ப விவரம், வழக்குகள், சொத்து மதிப்பு அனைத்து பட்டியலிடப்பட்டிருக்கும். இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிரவும்.

News April 3, 2026

நகைக்கடன்.. GOOD NEWS வந்தாச்சு

image

நகைக்கடனுக்கான தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்போது அதற்கு வரி விதிக்கப்படுமா என்ற கேள்வி எழலாம். ஆனால், நம்முடைய சொத்துக்கு ஈடாகவே கடன் வாங்குவதால், அது நமது வருமானமாக கருதப்படாது. எனவே, நகைக்கடனுக்கான தொகைக்கு வருமான வரித்துறையால் வரி விதிக்கப்படாது. அதேநேரம் ₹10 லட்சத்துக்கு மேல் நகைக்கடன் வாங்கினால், அதற்கான ஆவணங்களை பராமரிப்பது அவசியம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

error: Content is protected !!