News September 2, 2024

1000 வெள்ளம் கண்ட அபூர்வ கோயில்

image

திருநெல்வேலி மாநகர் குறுக்குத்துறை தாமிரபரணி நதிக்குள் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கல்வெட்டுகளை நெல்லை பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவிகள் மீனா, சுகன்யா, பாரதி, ராணா ஆகியோர் படிவம் எடுத்து ஆய்வு செய்தனர். இதில் 950 ஆண்டு பழமையான கோயில் என தெரியவந்துள்ளது. கருவறை 1000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். ஆண்டுதோறும் வெள்ளம் வெள்ளத்தில் இக்கோயில் மூழ்கினாலும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

Similar News

News November 14, 2025

ஆசிரியர் தகுதி தேர்வு 11,640 பேர் எழுதுகின்றனர்

image

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது. அதில் முதல் தாள் 11 தேர்வு மையங்களிலும் இரண்டாம் தாள் 35 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 11,640 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுப் பணியில் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

JUST IN கவின் கொலை வழக்கு; ஒருவருக்கு பிடிவாரண்ட்

image

திருநெல்வேலி நீதிமன்றத்தில் இன்று கவின் கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது. சுர்ஜித்தின் தாயான உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி அவரது கணவர் சரவணன் மகன் சுர்ஜித் உறவினர் ஜெயபாலன் ஆகிய நான்கு பேர் மீது நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. கிருஷ்ணகுமாரியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றதை தொடர்ந்து திருநெல்வேலி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

News November 14, 2025

நெல்லை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

நெல்லை மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<> aservices.t police.gov.in <<>>என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!