News April 6, 2025

1000 கணக்கில் போதை மாத்திரை கடத்திய இளைஞர்கள்

image

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல்.4) இரவு ரயில் நிலையப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் பையில் 1087 போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து ஆற்காடு ஜெய்கணேஷ் (21), ராணிப்பேட்டை ஹரிஷ் குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News April 6, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 6 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அரக்கோணம் காவேரிப்பாக்கம் சோளிங்கர் பாணாவரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

News April 6, 2025

சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கான் பேடா

image

ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆற்காடு பகுதியில் தயார் செய்ப்படும் மக்கான் பேடா மிகவும் பிரபலம். சுவையில் குலாப் ஜாமூன் போல இருக்கும் மக்கான் பேடா உருண்டையில் உலர் பழங்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதனுள் வைக்கப்படும் உலர்த்தப்பட்ட முந்திர, திராட்சை. பூசணி விதை, வெள்ளரி விதை போன்றவை தான் இதன் தனித்துவத்தை உறுதி செய்கிறது. ஆற்காடு மக்கான் பேடா பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க..

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!