News April 6, 2025
1000 கணக்கில் போதை மாத்திரை கடத்திய இளைஞர்கள்

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல்.4) இரவு ரயில் நிலையப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் பையில் 1087 போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து ஆற்காடு ஜெய்கணேஷ் (21), ராணிப்பேட்டை ஹரிஷ் குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News April 17, 2025
வேலை தேடும் ராணிப்பேட்டை இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 322 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<
News April 17, 2025
அதிவேக வாகனங்களுக்கு அபராதம்- உஷார்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு ரேடார் கருவி மூலம் கண்காணித்து, இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கையை ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி. மோகன் மேற்கொண்டுள்ளார். வாகன உரிமையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத விவரங்கள் அனுப்பப்படுகிறது. விபத்துகளைத் தடுக்கும் முயற்சியாக இதை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். ஷேர் பண்ணுங்க.