News April 12, 2024
100 கி.மீ நடைபயணம்: குடை பிடித்த ஆட்சியர்
2024 மக்களவை தேர்தலையொட்டி தேனி மாவட்டம் முழுவதும் ஆட்சியர் ஷஜீவனா மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், 100கி.மீ. நடைபயணத்தின் 6-ம் நாளான
இன்று (12.04.2024) தேர்தல் விழிப்புணர்வு வாசகத்துடன் குடையினை பிடித்தபடி ஆட்சியர் விழிப்புணர்வு செய்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News November 20, 2024
தேனியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் கைது
தேனியில் தொடர் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூர்த்தி, அம்சராஜை காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருடியதை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 88 பவுன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பல பகுதிகளில் வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பங்களா, ஒரு நூற்பாலையை விலைக்கு வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது; கோவை சிறையில் இருவருரையும் அடைத்தனர்
News November 20, 2024
பெரியகுளத்தில்; உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.20) காலை 9 மணி முதல் நாளை (நவ.21) காலை 9 மணி வரை உங்களுடன் உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மருத்துவமனைகள், அலுவலகங்களில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இன்று மாலை 4:30 மணி முதல் 6 வரை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
சபரிமலை சென்று திரும்பிய வாகனம் விபத்து
தேனி மாவட்டம், பெரியகுளம் சாலையில் சபரிமலை சென்று திரும்பிய நேற்று(நவ.19) வடமாநில ஐயப்ப பக்தர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் பிரசன்னா, ராஜா, குமார், உள்பட ஐந்து பேரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.