News September 26, 2025

மருந்து தயாரிப்புக்கு 100% வரி: டிரம்ப்

image

USA-வில் ஒரு நிறுவனம், தங்கள் மருந்து உற்பத்தி ஆலையை கட்டமைக்காத பட்சத்தில், பிராண்டட் (அ) காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கு 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். மருந்து உற்பத்தி ஆலைக்கான கட்டுமானம் தொடங்கப்பட்டிருந்தால் வரி கிடையாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே இந்தியாவுக்கு 50% வரி உள்ள நிலையில், இது நாட்டின் மருந்து ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியாக அமையும்.

Similar News

News September 26, 2025

40 வயதில் தமிழ் நடிகை 2வது திருமணமா?

image

சிவப்பதிகாரம், மகாராஜா போன்ற படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை மம்தா மோகன்தாஸுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தமிழில் ‘மகாராஜா’, ‘பார்க்கிங்’ போன்ற படங்களை தயாரித்த Passion Studios தயாரிப்பாளர் சுதனை மம்தா திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், கோலிவுட்டில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.

News September 26, 2025

ஐகோர்ட், கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

மதுரை ஐகோர்ட் கிளை, சென்னையிலுள்ள ராணுவ அலுவலகம், கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததை அடுத்து, போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே, ஸ்டாலின், இபிஎஸ், விஜய் இல்லங்களுக்கும், IMD, GST அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 26, 2025

நீங்கள் உண்மை என நம்பிக்கொண்டிருக்கும் பொய்கள்

image

இந்த காலகட்டத்தில் சரியான உணவு பழக்கம் பற்றிய விழிப்புணர்வு வந்தாலும், கூடவே பொய்யான நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன. அவர்களும் இதனை அப்படியே நம்பி பின்பற்றுவதால் வேறு சில உடல்நல பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். அப்படி நீங்கள் உண்மை என நம்பியிருக்கும் பொய்யான தகவல்களை பற்றி மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணி தெரிஞ்சுக்கோங்க. விழிப்புணர்வுக்காக எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!