News October 2, 2025

ஒரே நாளில் 100 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

இந்தியாவில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதாக NCRB அறிக்கையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 2023-ல் ஒரு நாளில் 175 திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகவும், அதில் 100 உயிரிழப்புகள் மாரடைப்பால் நிகழ்ந்தவை என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023-ல் 35,637 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், TN-ல் 1,711 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். எனவே இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க..

Similar News

News October 2, 2025

EMI செலுத்தாவிட்டால் போன் லாக்? RBI கவர்னர் விளக்கம்

image

கடனில் போன் வாங்கிவிட்டு, EMI செலுத்தாமல் இருக்கும் நபர்களின் போனை லாக் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறையின் நன்மை, தீமைகளை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், இதில் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 2, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 2, புரட்டாசி 16 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை

News October 2, 2025

அமைதி ப்ளானை நிராகரிக்கும் ஹமாஸ்?

image

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்து, மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட 20 அம்ச திட்டத்தை டிரம்ப் கொண்டுவந்தார். இதற்கு இஸ்ரேல் PM நெதன்யாகு ஒப்புக்கொண்ட நிலையில், ஹமாஸ் இதற்கு இணங்க 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அமைதி திட்டத்தை ஹமாஸ் நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!