News December 5, 2024
1 செக்கண்ட்ல 100 ஜிபி.. வேற லெவலில் வரும் நோக்கியா..!

ஒரு நொடியில் 100 ஜிபி டவுன்லோடு செய்யும் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனையை நோக்கியா வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த OPEN FIBER நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை விரைவில் வழங்க உள்ளது. இதற்கு உள்கட்டமைப்பு வசதிகளில் எவ்வித மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை என்பது கூடுதல் அம்சம். தற்போது OPEN FIBER நிறுவனம் நொடிக்கு 10 ஜிபி டவுன்லோடு செய்யும் வகையில் சேவையை வழங்கி வருகிறது.
Similar News
News April 29, 2025
கடனாளியாக்கும் முதல்வர்: அரசு ஊழியர்கள் சங்கம்

சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகள் கடன் சார்ந்த விஷயங்களாகவே இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழியர்களுக்கு சலுகை கொடுப்பது போல் ஏமாற்றி, மீண்டும் அரசுக்கே திரும்ப பெறக்கூடிய வகையில் கடனாளியாக்க முயல்வதாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் அச்சங்கம் சாடியுள்ளது.
News April 29, 2025
சம்மரில் சாப்பிடக் கூடாத உணவுகள்

கோடைக்காலத்தில் உடல் சூட்டை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இறைச்சி வகைகள் குறிப்பாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது மூளையில் வெப்பத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொறித்த உணவுகள் நீர்ச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். டீ, காபி குடிப்பது சோர்வு, தலைச்சுற்றல், வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். காரசாரமான மசாலா அதிகம் சேர்த்த உணவுகள் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
News April 29, 2025
உக்ரைனில் வடகொரியர்கள்.. ஒப்புக்கொண்ட கிம்!

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் சண்டையிடுவதை அந்நாடு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் வசம் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தை மீட்க ரஷ்ய வீரர்களுக்கு உதவுவதாகவும், அங்கு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் எனவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 14,000 வடகொரிய வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.