News May 23, 2024

இம்மாத இறுதிக்குள் 100% ரேஷன் பொருள்கள் விநியோகம்

image

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் ரேஷன் பொருள்கள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பரப்பு, பாமாயில் பாக்கெட் உள்ளிட்ட பொருள்கள் 100% விநியோகிக்கப்படும் எனவும் அரசு விளக்கமளித்துள்ளது.

Similar News

News April 7, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,040 குறைந்தது

image

தங்கம் விலை நேற்று மாலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு ₹1,440 உயர்ந்த நிலையில், இன்று அந்த விலையில் தலைகீழாக சரிந்து காலை நேர வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹130 குறைந்து ₹13,860-க்கும், சவரன் ₹1,040 குறைந்து ₹1,10,880-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடிவருவதால் நகை வாங்க நினைக்கும் நடுத்தர மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News April 7, 2026

தாமரை மலரட்டும் அவிநாசி வளரட்டும்: எல்.முருகன்

image

அதிமுக வசம் இருந்த அவிநாசி தொகுதியில் இம்முறையில் பாஜக சார்பில் எல்.முருகன் களமிறங்கியுள்ளார். அந்த தொகுதியின் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் வாழ்த்து பெற்றுவிட்டு, எல்.முருகன் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். குப்பேபாளையம் மற்றும் காட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்த அவர், அவிநாசிக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு கேட்டார்.

News April 7, 2026

ஏர் இந்தியா CEO ராஜினாமா

image

ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியை, கேம்பல் வில்சன் ராஜினாமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027-ல் முடிவடையவுள்ளது. ஆனால், அதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், புதிய CEO பொறுப்பேற்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார். கடந்தாண்டு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்ததும், அதனால் 2025 நிதியாண்டில் இந்நிறுவனம் ₹20,000 கோடியை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!