News July 4, 2025
ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள்.. காரணம் என்ன?

மிக கொடுமையான விஷயங்களில் ஒன்று தனிமை. தனிமையால் ஒரு மணி நேரத்தில் 100 மரணங்கள் உலகளவில் நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ளது. 6-ல் ஒருவர் உலகளவில், தனிமையால் உயிரிழப்பதாகவும், கடந்த 2014 – 2013 வரை 8.7 லட்சம் மக்கள் இதனால் மரணத்தை சந்தித்துள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது. டீனேஜ் மற்றும் இளைஞர்கள் தனிமையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
இபிஎஸ்-ஐ அதிமுகவில் இருந்து நீக்க முடிவு

அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அவரை <<17636136>>பெங்களூரு புகழேந்தி<<>> நேரில் சந்தித்தார். பின்னர், பேசிய அவர், EPS-ஐ கட்சியில் இருந்து நாங்கள் நீக்குவோம் என்றார். இதனிடையே, செங்கோட்டையனுக்கு ஆதரவாக சசிகலா, OPS விரைவில் அவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தான் கூறியது போல ஒருங்கிணைப்பு பணி தொடரும் என <<17629802>>செங்கோட்டையன்<<>> திட்டவட்டமாக கூறியிருந்தார்.
News September 7, 2025
அதிமுகவை கூறு போட்ட பாஜக: உதயநிதி

சென்னை கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய DCM உதயநிதி ஸ்டாலின் வரும் தேர்தலுக்காக முழுவீச்சில் செயல்பட்டால், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் எனவும், அதற்கான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சியை குறித்து பேசிய அவர், அதிமுகவை பாஜக கூறு போட்டுவிட்டதாக DCM உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.
News September 7, 2025
இபிஎஸ்-ஐ நாங்கள் நீக்குவோம்: புகழேந்தி

EPS ஒன்றும் அதிமுகவுக்கு சொந்தக்காரர் அல்ல என்று பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், தங்கமணியும், வேலுமணியும் சேர்ந்து EPS-ஐ இயக்குவதாக சாடினார். அத்துடன், உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் செங்கோட்டையன் பக்கம் நிற்பதாக கூறிய அவர், நாங்கள் எல்லோரும் சேர்ந்து பழனிசாமியை ஓரம் கட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.