News March 28, 2025

100 நாள் வேலைத் திட்ட ஊதியம் உயர்வு

image

100 நாள் வேலைத் திட்ட தினசரி ஊதியத்தை ₹17 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் நாளொன்றுக்கு ₹319 வழங்கப்பட்டு வந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ₹336ஆக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கான MGNREGA திட்ட நிதி ₹4,034 கோடி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News March 31, 2025

உ.பி.யில் 582 நீதிபதிகள் திடீர் பணியிட மாற்றம்

image

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 236 கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள், 346 சிவில் நீதிபதிகளும் மாற்றப்பட்டனர். அதிகபட்சமாக கான்பூர் மாவட்டத்தில் இருந்து 13 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நீதிமன்றங்களில் உடனடியாக பணியைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 31, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹520 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 31) சவரனுக்கு ₹520 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,425க்கும், சவரன் வரலாறு காணாத புதிய உச்சமாக ₹67,400க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹113க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,13,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..

News March 31, 2025

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்?

image

செங்கோட்டையன் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் இணைக்க இபிஎஸ் மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால், செங்கோட்டையனை வைத்து அவர்களைக் கட்சியில் இணைக்க BJP முயல்வதாக கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ரகசியமாக டெல்லி சென்று திரும்பிய அவர், இன்று மீண்டும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!