News March 28, 2024
100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு

தமிழகம் உட்பட அனைத்து மாநிலத்திற்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.319ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான ஊதியம் ரூ.294 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 21, 2025
BREAKING: விலை ₹7,000 குறைந்தது

வெள்ளி விலை 2 நாள்களில் கிலோவுக்கு ₹7,000 குறைந்துள்ளது. நேற்று(நவ.20) ₹3,000 குறைந்த நிலையில், இன்று ₹4,000 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹169-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,69,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை வரும் நாள்களிலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதால், முதலீடு நோக்கத்தில் வாங்குவோர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.
News November 21, 2025
இறந்த பின்பும் சார்லஸை பழிவாங்கும் டயானா

பாரிஸில் உள்ள கிரெவின் அருங்காட்சியத்தில், பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனின் தற்போதைய அரசரும், EX கணவருமான சார்லஸ், திருமணத்தை மீறிய உறவை ஒப்புக்கொண்ட அன்று, அவரை பழிவாங்க கருப்பு நிற ஆடையை டயானா அணிந்தார். அதே உடையில் தற்போது மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது. 1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
கவர்னருக்கு கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: CM

மசோதாக்களை நிறைவேற்ற கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் சட்டம் திருத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று CM ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்தால் மாநில அரசுகள் வழக்கு தொடுக்க உரிமை உள்ளது என்பதை <<18340284>>SC<<>> உறுதி செய்துள்ளதாக கூறிய அவர், எந்த அதிகாரமும் அரசியலமைப்பை விட பெரிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகளை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


