News October 1, 2024
100 நாள் வேலைத்திட்டம்: 6 லட்சம் பேர் நீக்கம்

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் 6 லட்சம் பேரை மத்திய அரசு நீக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 13.16 கோடி பேர் பயன்பெற்று வந்தனர். இதில் தமிழகத்தில் மட்டும் 89 லட்சம் பேர் பயனாளிகளாக இருந்தனர். இந்நிலையில், போலி அடையாள அட்டை, பணியாற்ற விருப்பமின்மை உள்ளிட்ட பல காரணங்களுக்காக நாடு முழுவதும் 23 லட்சம் பேரையும், தமிழகத்தில் 6 லட்சம் பேரையும் மத்திய அரசு நீக்கியுள்ளது.
Similar News
News August 13, 2025
ஆகஸ்ட் 13: வரலாற்றில் இன்று

*1926 – புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினம்.
*1952 – நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் பிறந்த தினம்.
*1963 – நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம்.
*1969 – நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தனர்.
*2004 – 28-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
News August 13, 2025
ஹிமாச்சலில் 229 பேர் பலி: சேத மதிப்பு ₹2000 கோடி

ஹிமாச்சலில் பருவமழை மற்றும் விபத்துகளால் 229 பேர் பலியாகியுள்ளனர். இதில் நிலச்சரிவு, வெள்ளம், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 119 பேரும், சாலை விபத்துகளில் 110 பேரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 395 சாலைகள், 669 டிரான்ஸ்பார்மர்கள், 529 குடிநீர் திட்டங்கள் சேதமடைந்திருப்பதாகவும், மாநிலத்தின் மொத்த பொருளாதர இழப்பு சுமார் ₹2,007.4 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
News August 13, 2025
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

*புரட்சியில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களின் பங்களிப்பும் அவசியம். அப்போதுதான் உண்மையான மாற்றம் நடக்கும்.
*போராடும் நேரத்தில் அதை வீண் முயற்சி என்பார்கள், வெற்றியை அடைந்த பிறகு அதையே விடாமுயற்சி என புகழ்வார்கள்.
*கஷ்டங்கள் இல்லையெனில், போராடும் ஆவல் நமக்கு முற்றிலும் மறைந்து விடும்.
* உன்னை அதிகமாக விமர்சிக்கும் மனிதன் உன்னைப் பற்றி மிகுந்த அச்சத்துடன் இருக்கிறான்.