News January 7, 2025

விரைவில் 100 கோடி வாக்காளர்கள்

image

இந்தியா விரைவில் 100 கோடி வாக்காளர்களை எட்டும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், EVM மெஷின் மீது பலரும் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. ஆனால், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனால், காலாவதியான வாக்குச்சீட்டு முறை தேவையற்றது எனக் கூறினார்.

Similar News

News January 14, 2026

டீச்சர்களின் போராட்டத்திற்கு இன்று தீர்வா?

image

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 19 நாள்களாக இடைநிலை ஆசிரியர்கள் தீவிரமாக <<18797386>>போராடி<<>> வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இந்த போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 14, 2026

BREAKING: பொங்கல் சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி

image

TN மக்களுக்கு PM மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒவ்வொருவரின் மெயிலுக்கும் அவரவர் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து அனுப்பியுள்ளார். மனிதனுக்கும், இயற்கைக்குமான நெருக்கத்தை காட்டும் பொங்கல், சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி; உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம் அடைவதாகவும் கூறியுள்ளார். PM வாழ்த்து உங்களுக்கு வந்ததா?

News January 14, 2026

2040 வரை வராது.. இன்றைய போகியின் ஸ்பெஷல்

image

இன்று நாம் கொண்டாடி வரும் போகி பண்டிகையுடன் ஷட்திலா ஏகாதசியும் சேர்ந்து வந்துள்ளது. போகி அன்று, ஏகாதசி திதி வருவது கூடுதல் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நிகழ்வு அடுத்ததாக 2040-ல் தான் நிகழ்கிறதாம். இன்றைய தினம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், எள், வெல்லம், துணிகள், நெய், உப்பு, செருப்புகளை தானமாக கொடுப்பதும் நன்மைகள் தருமாம். SHARE IT.

error: Content is protected !!