News March 23, 2024
100% வாக்களிப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு

கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்தல், உறுதிமொழி எடுத்தல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற பணிகளில் மகளிர் திட்ட அலுவலர் தலைமையில் க.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொது மக்களுக்கு துண்டு பிரதிகள் வினியோகம் செய்யப்பட்டது. மக்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய உறுதிமொழி ஏற்றனர்.
Similar News
News August 16, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 16.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 16, 2025
தேனி: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <
News August 16, 2025
தேனி: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <