News April 19, 2024

100 வயது முதியவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்

image

திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வல்லூர் கிராமத்தில் வசிக்கும் 100 வயது முதியவரான ஸ்டீபன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவினை புத் எண் 220க்கு சென்று ஜனநாயக கடமையான தனது வாக்கை பதிவிட்டார். காமராஜர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

Similar News

News July 5, 2025

திருவள்ளூரில் வீட்டு, நில பத்திரத்தில் பிரச்னையா ?

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (044-27661230) அழைக்கலாம். அனைவருக்கும் பகிரவும்

News July 5, 2025

திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறப்பு

image

திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் 5 ஏக்கரில் இந்த திட்டம் 2023 ஜூலை தொடங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயக்கத்துக்கு, வசதியாக அடிப்படை கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.

News July 5, 2025

திருவள்ளூரில் திறக்கப்பட்டது ஆம்ஸ்ட்ராங் சிலை

image

திருவள்ளூரில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் சிலை இன்று (ஜூன் 5) திறக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில், கோரிக்கை மனு சமர்பித்து, அனுமதி வழங்கியதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் சிலையை திறந்துவைத்தார் தலைமை நீதிபதியின் தாயார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5,2024, சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!