News December 8, 2025

100 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு

image

2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் 100 மொழிகளில் திருக்குறளை கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுவரை 25 இந்திய மொழிகளிலும், 9 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாள்களில் ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 4, மாசி 20 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 4, 2026

730 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 730 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்சிகியூட்டிவ், சீனியர் ஆபிசர், மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு 25-39 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: டிப்ளமோ/ டிகிரி/ B.E/ B.Tech / M.C.A/ CA. ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மார்ச் 25-க்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

News March 4, 2026

வரகு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

image

சிறுதானியமான வரகு அரிசியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் இருக்கின்றன. வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்படுவார்கள் அதை உணவில் சேர்க்கலாம். அத்துடன், சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல வயிறு, குடலில் உள்ள புண்கள் குணமாகும். மாதவிடாய் பிரச்னைகள் தீர பெண்கள் இதை சாப்பிட டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!