News September 16, 2025
100% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவிகித மானியத்தில் கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் விவசாய சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருமருகல் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். LIKE & SHARE..
Similar News
News September 16, 2025
நாகை அருகே குளத்தில் மிதந்த பிணம்

வேதாரண்யம் தாலுகா, திருவாசக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அன்பு கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி முகமைத் துறை அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார். உடன் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் பங்கேற்றனர்.
News September 15, 2025
நாகை: வேண்டியதை அருளும் முருகன் கோயில்!

நாகை மாவட்டம் எட்டுக்குடி கிராமத்தில், எட்டுக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான முருகனை வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கி கல்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.