News January 23, 2026

100 நாள் வேலை திட்டம்.. இன்று சிறப்பு தீர்மானம்

image

சட்டப்பேரவையில் நேற்று,100 நாள் வேலையை 150 நாள்களாக உயர்த்தப்படும் என கொடுத்த தேர்தல் வாக்குறுதியை செய்தீர்களா? என EPS எழுப்பிய கேள்விக்கு, ஆமாம் அது உண்மைதான், ஆனால் அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்று CM ஸ்டாலின் பதிலளித்தார். இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜன. 23) சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News January 31, 2026

BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் விஜய்

image

‘I’am not a kingmaker, I will win’ என வரும் தேர்தலில் தனித்து களம் காண்பதை முதல் முறையாக விஜய் உறுதி செய்துள்ளார். NDTV-க்கு அவர் அளித்த நேர்காணலில், தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாக அதிரடியாக கூறியுள்ளார். கடந்த சில காலமாக ஆட்சியில் பங்கு எனக் கூறி வந்த தவெக காங்கிரஸ், அமமுக, பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது தனித்து களம் காணத் தயாராகியுள்ளது.

News January 31, 2026

கர்ப்பிணிகளுக்கு ₹11,000 வழங்கும் PMMVY திட்டம்!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ₹11 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும், கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரை என 3 தவணைகளில் பணம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க https://pmmvy.wcd.gov.in இணையதளத்தை பார்வையிடுங்கள். இந்த முக்கிய திட்டத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 31, 2026

முதல் பெண் DCM.. யார் இந்த சுனேத்ரா பவார்?

image

MH-ன் முதல் பெண் DCM-ஆக பதவியேற்கும் சுனேத்ரா பவார் அரசியலில் ஆக்டிவாக இருப்பவர். கடந்த லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், இவருக்கு ராஜ்யசபா MP பதவி வழங்கப்பட்டது. 2010-ல் Organic Farming-காக அமைப்பை தொடங்கி ‘கிரீன் வாரியர்’ விருது பெற்றார். பிறகு பிரான்சில் உலக தொழில்முனைவோர் மன்றத்தின் சிந்தனை குழு உறுப்பினராக இருப்பது, கட்சிக்காக பிரசாரங்கள் செய்வது என களப்பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.

error: Content is protected !!