News December 16, 2025
100 நாள் வேலைத்திட்ட மாற்றம்: திமுக நோட்டீஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, VB-G Ram G திட்டத்துக்கான மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் திமுக MP டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். முன்னதாக, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு சின்னாபின்னமாக்குவதாக <<18573575>>CM ஸ்டாலின்<<>> விமர்சித்திருந்தார்.
Similar News
News December 18, 2025
கூண்டோடு ராஜினாமா.. செந்தில்பாலாஜி அதிர்ச்சி

கோவையில் <<18573595>>திமுக நிர்வாகிகள்<<>> 70-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்தது செந்தில்பாலாஜிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்பாலாஜி வந்தபிறகு கோவையில் மாற்றுக் கட்சியில் இருந்து சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது உள்கட்சி மோதலாக வெடித்துள்ளது. இதனை சரிசெய்யும் பணிகளை திமுக தலைமை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News December 18, 2025
ஒரு பூனையோட சொத்து ₹839 கோடியா!

டைட்டிலை படிச்சதும் தலை சுத்துதா! இந்த பூனையின் பெயர் Nala. நியூயார்க்கில் வசித்துவரும் இது, Siamese – Tabby வகையை சேர்ந்தது. இந்த பூனை தனது உழைப்பால், இவ்வளவு பணத்தை சேர்த்துள்ளது. சோஷியல் மீடியாவில் மிக பிரபலமாக இருக்கும் இதற்கு கிட்டத்தட்ட 4.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். Love Nala என்ற சொந்த பிராண்ட்(செல்லப்பிராணிக்கான உணவு), Collobration மூலம் Nala இவ்வளவு பணத்தை வாரி குவித்துள்ளது.
News December 18, 2025
இந்த மோசடியில் மாட்டிக்காதீங்க.. SBI எச்சரிக்கை!

பரவி வரும் மோசடி மெசேஜ்கள் குறித்து SBI எச்சரித்துள்ளது. YONO SBI-ல் Reward பாயிண்ட்ஸ் தருவதாக Whatsapp உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் போலியான மெசேஜ்கள் வருகிறதாம். அதை கிளிக் செய்தவுடன் உங்களின் தகவல்களை மோசடிக்காரர்கள் திருடிவிடுகிறார். இதுபோன்ற மெசேஜ்களை நம்பவேண்டாம் எனவும் இந்த மெசேஜ்கள் வந்தால், சைபர் கிரைம் 1930 அல்லது <


