News January 18, 2026

100 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய மாருதி திட்டம்

image

மாருதி சுசுகி நிறுவனம் தனது Vitara மாடல் காரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. Vitara உலக சந்தையில் Across என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக 450 கார்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விட்டாரா காரின் விலை ரூ. 10.50 லட்சம் முதல் ரூ. 19.98 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் விலை) உள்ளது.

Similar News

News February 15, 2026

ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க!

image

மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு நடைபயிற்சி பெரிதும் உதவும்◆2 நிமிடங்கள் நடந்தால், உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் ◆10 -15 நிமிடங்கள் நடந்தால், மன அழுத்தம் குறையும் ◆30 நிமிடங்கள் நடந்தால், உடலின் தேவையற்ற கொழுப்பு கரையும் ◆45 நிமிடங்கள் நடந்தால், எதிர்மறை எண்ணங்கள் குறைந்து, நிம்மதி அடைவீர்கள் ◆60 நிமிடங்கள் நடந்தால், டோபமைன் சுரந்து மனதில் சந்தோஷம் கூடும். ட்ரை பண்ணி பாருங்க. SHARE IT.

News February 15, 2026

மீண்டும் NDA கூட்டணியில் OPS?

image

’சேர்ந்தால் அதிமுகவில் தான் சேர்வேன்’ என உறுதியாக நிற்கிறார் OPS. ஆனால் அதற்கு வழி ஏதும் இல்லாததால், அமமுகவுக்கு வரும்படி ஆரம்பத்திலிருந்தே TTV கூறிவருகிறார். ஆனால் அதற்கும் ஒப்புக்கொள்ளாமல் OPS முரண்டு பிடிக்கிறார். இதனால், காரைக்கால் வந்த அமித்ஷா, OPS-ஐ NDA கூட்டணியில் இணைக்கும் அசைன்மென்ட்டை பாஜக நிர்வாகிகளுக்கு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் முயற்சிக்காவது OPS பிடிகொடுப்பாரா?

News February 15, 2026

கற்றல் திறன்.. பிப்.18 ரெடியா இருங்க மாணவர்களே!

image

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் சோதனைக்காக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு, கணித அடிப்படை திறன்கள் மதிப்பிடப்பட உள்ளன. பிப்.18 (புதன்கிழமை) மற்றும் பிப்.20-ல் பொதுமக்கள் முன்னிலையில் இந்த மதிப்பீடு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!