News February 13, 2026

100% தூய சக்தி தவெக தான்: விஜய் பேச்சு

image

4.45 ஆண்டுகளுக்கு பிறகு ‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ என்று திமுக அரசு ஒவ்வொருவரின் வீட்டுக் கதவை தட்டுகிறது என விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், உண்மையான மக்களின் கனவு என்னவென்றால், பாதுகாப்பில்லாத மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார். எனவே, 100% தூய சக்தியான தவெக நேர்மையான ஆட்சியை கொடுக்கும், இந்த விஜய் அந்த ஆட்சியை வழங்குவான் என்றும் கூறினார்.

Similar News

News February 18, 2026

BREAKING: விஜய்க்கு ஆதரவு.. அரசியலில் பரபரப்பு

image

திமுக கூட்டணியில் மதிமுக உள்ள நிலையில், அதன் முதன்மை செயலாளர் துரை வைகோ, விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் புரிதல் இல்லாத தமிழ்நாட்டு இளைஞர்களிடம் பெரியார், காமராஜர், அண்ணாவை கொண்டுசென்று விஜய் அரசியல்படுத்துகிறார் என அவர் பாராட்டு தெரிவித்தார். மதவாத, சாதிய கட்சிகளுக்கு எதிரான மனநிலையை இளைஞர்களிடம் விஜய் உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News February 18, 2026

டி20 உலகக் கோப்பை வின்னர் பாகிஸ்தானா?

image

WC தொடர்களில், ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா தோற்றபோதெல்லாம் <<19136396>>இந்தியா கோப்பையை<<>> வென்றுள்ளது என்பது வரலாறு. அதேபோல ஐசிசி தொடர்களில் ஆஸி., குரூப் சுற்றுடன் வெளியேறிய போதெல்லாம் (1992 ODI, 2009 டி20, 2017 CT) பாகிஸ்தான் மகுடம் சூடியிருக்கிறது. இதை ரசிகர்களும் அடிக்கடி நினைவுகூர்கின்றனர். இம்முறை, இதில் ஏதோ ஒன்று பொய்த்துப் போக வாய்ப்புள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்?

News February 18, 2026

₹6,000 வரை விலை உயருகிறது.. உடனே வாங்குவது நல்லது!

image

கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், நடப்பு காலாண்டுக்குள் AC விலை 10 – 15% வரை விலை உயரும் என அத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, AC தயாரிப்புக்கு முக்கியமான செம்பு விலை உயர்வு, அந்நியச் செலாவணி மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாம். இதனால், சுமார் ₹40,000-க்கு விற்பனையாகும் ஒரு AC-ன் விலை சுமார் ₹6,000 வரை விலை உயரும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!