News August 30, 2025
100% எழுத்தறிவு பெற்ற கிராமங்கள்

திருத்தணி ஒன்றியத்தில் சி.எச் அக்ரஹாரம் மற்றும் மேலெட்டிக்குப்பம் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் 100% கல்வியறிவு எட்டப்பட்டது என்று கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 100 % எழுத்தறிவு பெற்ற கிராமம் என சார்ந்த அலுவலர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அந்த இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பலரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 30, 2025
BREAKING-திருவள்ளூர் எம்.பி மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News August 30, 2025
திருவள்ளூர்: 3 மாதத்தில் பிரச்சனை தீர்க்கும் கோயில்

திருவள்ளூர் மாவட்டம் , திருப்பாசூர் கிராமத்தில் அமைந்துள்ளது வாசீஸ்வர சுவாமி கோயில். இது, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பினைக் கொண்ட கோயில். 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் இரண்டாம் கரிகால சோழனால் கட்டப்பட்டது. 11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும், விநாயகர் சபை ஒன்றும் உள்ளது. விநாயகரை வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் மூன்று மாதத்தில் தீரும் என்பது ஐதீகம்
News August 30, 2025
ரூ. 59 லட்சம் கடத்தி வந்த வட மாநிலத்தவர் கைது

திருவள்ளூர், ஊத்துக்கோட்டை நாகலாபுரம் சோதனை சாவடியில் இன்று மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர அரசு பேருந்து சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் செய்தபோது சந்தேகத்திற்கிடமாக இருந்த பேக்கில் ரூபாய் 59 லட்சம் பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து பணம் எடுத்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோரக்நாத் என்பவரை கைது செய்தனர்.